.

.

டி.இ.டி., 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு

- 0 comments

டி.இ.டி., 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு

READ>> 

 

TNPSC MOdel Questions

READ>>

 

 

[Continue reading...]

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு உதவி பெறும் பள்ளி நோக்கி படையெடுப்பு

- 0 comments
ஆசிரியர் தகுதித்தேர்வில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு மவுசு உருவாகியுள்ளது. இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தினர், தற்போது பல லட்சம் ரூபாய் வரை ஆசிரியர் பணியிடங்களை விலைபேசி வருகின்றன.

தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டம், 2010 ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வெழுதினாலும், 20 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்பதால் காலியாக இருந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அரசு பள்ளிகளில் பணி கிடைத்ததால், உதவி பெறும் பள்ளிகளில் வேலைவாய்ப்பை பெற யாரும் ஆர்வம் காட்டவில்லை.

பெரும்பாலான உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க முடியாமல், இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்தன. கடந்த ஆண்டு நடந்த தகுதித்தேர்வு முடிவில் 30 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனத்துக்கு தயாராகும் நிலையில் தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் வழங்கியது. இதனால் கூடுதலாக, 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால், அரசு பள்ளிகளில் அதிக பட்சம் 10 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும் என்பதால், மீதமுள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, நடப்பு ஆண்டில் அரசு பணி கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், அடுத்த ஆண்டில் மீண்டும் தேர்வு நடத்தி அதன் பின் கிடைக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முன்னுரிமையில் பணியிடம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைப்பது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இவர்களின் பார்வை, தற்போது உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகம் அடைந்து உள்ளன. ஆசிரியர் பணியிடங்களுக்கு நிர்ணயித்திருந்த, "விலை"யையும், உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கிடைக்காமல், உதவி பெறும் பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. தற்போது, அளவுக்கதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளதால், காலிப்பணியிடங்களை நிரப்ப ஆர்வம் காட்டாத பல பள்ளி நிர்வாகத்தினர், தற்போது அனுமதிக்கு விண்ணப்பித்து வருகின்றன.

அதேபோல் ஒரு ஆசிரியர் பணியிடம் நிரப்ப, பல லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக, தற்போதே புகாரும் வரத்துவங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
[Continue reading...]

பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை

- 0 comments
தேர்வு புகார்களை பெற கட்டுப்பாட்டு அறை அமைப்பு
பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் செயல்படும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு, நாளை துவங்கி 25ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதி வரையிலும் நடக்கிறது. தேர்வு தொடர்பான தகவல்கள், புகார்கள், குறைகள் உள்ளிட்ட பிரச்னைகளை தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு, அதிகாரிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

காலை 8:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை ஒரு, குழுவினரும், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இன்னொரு குழுவினரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவர். 044-2827 8284, 044-2827 8286, 044-2827 2088 ஆகிய தொலைபேசி எண்களில், கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு
[Continue reading...]

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வை நடத்த ரூ.30 கோடி

- 0 comments
ஒன்றரை மாதம் நடக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணியில் வினாத்தாள் மற்றும் விடைத்தாளை கொண்டு செல்லும் பணியில் வாடகை கார்கள் பயன்படுத்துவதால், அவர்களுக்கு, தொடர்ச்சியாக வேலை கிடைத்துள்ளது. தேர்வை நடத்த 30 கோடி ரூபாயை தேர்வுத்துறை செலவழிக்க உள்ளது.

கடந்த ஆண்டு வரை, வினாத்தாள், விடைத்தாள் போக்குவரத்து பணியில், அஞ்சல் துறையை, தேர்வுத்துறை பயன்படுத்தியது. கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இரு விடைத்தாள் கட்டுகளை, தபால்துறை ஊழியர், பஸ்சில் எடுத்துச் சென்று, தவற விட்ட விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், ரயிலில் எடுத்துச் சென்ற விடைத்தாள் கட்டுகள், கீழே விழுந்து சேதம் அடைந்தன. அஞ்சல் துறையின் மெத்தனத்தால் இந்த இரு சம்பவங்களும் நடந்ததாக, தேர்வுத்துறை குற்றம் சாட்டியது. இதன் காரணமாக, இந்த ஆண்டு வினாத்தாள், விடைத்தாள் போக்குவரத்து பணியில் அஞ்சல் துறையை ஈடுபடுத்தவில்லை.

மாறாக மாநிலம் முழுவதும், வாடகை கார்களை பயன்படுத்த தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையத்திற்கு, வினாத்தாள் கட்டுகளை கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு முடிந்தபின் விடைத்தாள் கட்டுகளை, விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் வாடகை கார்கள் பயன்படுத்தப்படும்.

நான்கு, ஐந்து மையங்களுக்கு சேர்த்து, ஒரு கார் என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்துள்ளனர். இதன் காரணமாக, நாளை துவங்கி, ஏப்ரல் 9ம் தேதி வரை தொடர்ந்து, வாடகை கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், ஒன்றரை மாதம் வரை, வாடகை கார் வைத்திருப்பவர்களுக்கு, வேலை கிடைத்துள்ளது. காரில் ஒரு போலீஸ்காரர், முதுகலை ஆசிரியர் நிலையில் ஒரு வழித்தட அலுவலர் இருப்பர்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணிகளுக்காக, 30 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது. மொழிப் பாட தேர்வுகளின் போது, ஒரு லட்சம் பேரும், இதர பாட தேர்வுகளின்போது, 60 ஆயிரம் பேர் வரையும், தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு அலுவலரின் நிலைக்கு ஏற்ப, தேர்வுப்படி வழங்கப்படுகிறது.
[Continue reading...]

ஆசிரியர்கள் தேர்வு மையத்தில் 9.30க்கு இருக்க வேண்டும் - உத்தரவு

- 0 comments
தேர்வு மையத்தில் 9.30-க்கு இருக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு உத்தரவு


திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை (மார்ச் 3) துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 897 தனித்தேர்வர் உட்பட, 169 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 23,606 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். முதன்மை கண்காணிப்பாளர்கள் 59, துறை அலுவலர்கள் 82, அறை கண்காணிப்பாளர்கள் 1,181 என 1,322 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களும், தேர்வு நாளன்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில், காலை 9.30 மணிக்கு கட்டாயம் இருக்க வேண்டும்; தாமதமாக வரக்கூடாது. தேர்வு எழுதும் மாணவர்களை 9.50 மணிக்கு அறைக்குள் அனுமதிக்க வேண்டும். 9.55 மணிக்கு, வினாத்தாள் பண்டலை பிரிக்க வேண்டும்; 10.00 மணிக்கு, வினியோகிக்க வேண்டும்.

10 நிமிடங்கள், வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்படும். 10.10 மணிக்கு விடைத்தாள் வழங்க வேண்டும். தேர்வு மணி ஒலித்தபின், 10.15 மணிக்கு, மாணவர்களை விடைத்தாளில் எழுத அறிவுறுத்த வேண்டும்; 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும்.

இடையிடையே மணி ஒலிக்கும்போது, அப்போதைய நேரத்தை தெரிவிக்கலாம். 1.10 மணிக்கு, தேர்வு முடிவடைய இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன என்பதை மாணவர்களுக்கு நினைவுபடுத்தி, விடைகளை துரிதமாக எழுதி முடிக்க அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
[Continue reading...]

"லாங் லீவ்" எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு-ஆசிரியர்கள் கலக்கத்தில்...

- 0 comments
தேர்வு நேரத்தில், நீண்டகால விடுப்பு எடுத்துள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை, பள்ளி வாயிலாக, பள்ளிக்கல்வி இயக்குனர் சேகரிக்க உத்தரவிட்டுள்ளதால் லீவுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 26ம் தேதியும் துவங்குகிறது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், மற்ற வகுப்புகளுக்கும், கடந்த ஆண்டை காட்டிலும், முன்னதாகவே நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது குழந்தைள் பிளஸ், 2 தேர்வுக்கு தயாராவதற்கு, உதவி செய்யும் வகையில், பல ஆசிரியர்கள் நீண்டவிடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்தனர். இதில் பலரும் முன்கூட்டியே மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு செல்லும் நிலையில், ஆசிரியர்கள் விடுப்பில் செல்லும் போது கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக, செய்தி வெளியானது.

இதையடுத்து ஒவ்வொரு பள்ளி வாயிலாக, எந்தந்த ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து கொண்டு வருமாறு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
[Continue reading...]

5 சதவீத சலுகை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக டி.ஆர்.பி. வெளியிட்டது.

- 0 comments
சென்னை: 5 சதவீத சலுகை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது.

டி.ஆர்.பி.,யின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.இ.டி., முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல், 32 மாவட்டங்களுக்கும், தனித்தனியே வெளியிடப்பட்டு உள்ளது.
[Continue reading...]

டி.இ.டி., தேர்வில் இதர மாற்றுத்திறனாளிகளை புறக்கணிப்பதா?

- 0 comments
டி.இ.டி., தேர்வில் இதர மாற்றுத்திறனாளிகளை புறக்கணிப்பதா?பிப்ரவரி 21,2014,07:26 IST "சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), பார்வையற்றோர் மட்டும், அனுமதிக்கப்படுவர்" என்ற, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) உத்தரவை ரத்து செய்து, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டி.இ.டி., தேர்வில், மாற்றுத் திறனாளிகள், தேர்ச்சி பெறுவதில், பல சிரமங்கள் இருந்ததால், அம்முறையை மாற்ற வேண்டும் என மாற்றுத் திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 1995ல் இயற்றப்பட்ட, சம வாய்ப்பு சட்டத்தின் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, "மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்" என கடந்த ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில் "சிறப்பு டி.இ.டி., தேர்வுக்கு பார்வையற்றோர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, பார்வையற்றோர் அல்லாத இதர குறைபாடுகளை உடைய மாற்றுத் திறனாளிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: "பி.எட்., படித்து, பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைப்பதற்கு, தனியாக டி.இ.டி., தேர்வு நடத்தப்படும். இதில் தகுதி பெறும், பி.எட்., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு (ஏற்கனவே நிரப்பப்படாமல் உள்ள இடங்கள்) காலி பணியிடங்களிலும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுவர்" என கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்தார். இதுவே பின், அரசாணையாக வெளியிடப்பட்டது. இதன்படி அரசாணை மற்றும் முதல்வர் அறிவிப்பில், "மாற்றுத் திறனாளிகள்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எனில் பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் என, அனைவரும் அடங்குவர். ஆனால், "சிறப்பு டி.இ.டி., தேர்வுக்கு பார்வையற்றோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதன் மூலம் முதல்வர் உத்தரவை, டி.ஆர்.பி., மீறி உள்ளது. சிறப்பு தகுதித் தேர்வுக்காக காத்திருக்கும், பல்வேறு மாற்றுத் திறனாளிகளுக்கு, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும், தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் உத்தரவை மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "அரசாணையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி தான், அறிவிப்பை வெளியிட்டு உள்ளோம். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கி புதிய அரசாணை வெளியானால், அதன்படி நடவடிக்கை எடுக்க, தயாராக உள்ளோம்" என தெரிவித்தது.
[Continue reading...]

10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வுத்துறை கவனக்குறைவு

- 0 comments
10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வுத்துறை கவனக்குறைவு
தேர்வுத்துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல் ரோல்" வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த செய்முறை தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளதால் அதற்கு முன் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும் நோக்கில், பிப்., 21ம் தேதி முதல் செய்முறை தேர்வை நடத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டது.


செய்முறை தேர்வு நடத்துவதற்கான, கண்காணிப்பாளர் பணிக்கு வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு, "ட்யூட்டி ஆர்டர்" வழங்கப்பட்டன. ஆனால் தேர்வுத்துறை, "நாமினல் ரோல்" வெளியிடவில்லை; இதனால் மாணவர்களுக்கு, பதிவு எண் மற்றும் "ஹால் டிக்கெட்" வழங்க முடியாத சூழல் உருவாகியது. இதையடுத்து 10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக நேற்று மாலை, கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இன்று காலை சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வுக்கு தயாரான நிலையில் நாமினல் ரோல், கடைசி நேரத்தில் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்படலாம் என ஆசிரியர்களுக்கு, "ரிலிவிங் ஆர்டர்" கொடுத்து விட்டோம்.

தற்போது திடீரென, செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
[Continue reading...]

முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு

- 0 comments


சென்னை: "ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்" என பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார்.

அவரது அறிவிப்பு: அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்" வழியில் காலை 10:00 மணி முதல் இந்த கலந்தாய்வு நடக்கும். டி.ஆர்.பி., தேர்வு வரிசை எண் அடிப்படையில், கலந்தாய்வு நடக்கும். முதலில் சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கும்.

கலந்தாய்வுக்குப் பின் பணி நியமன உத்தரவு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்" ஆகியவற்றுடன் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை-1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதனால், இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும் விரைவில் பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என தெரிகிறது.

இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், "தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும் எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும் விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்" என்றார்.
[Continue reading...]
 
Copyright © . கல்விச்செய்தி - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger